திருச்சியில்
லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்..
லால்குடி தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் கு.ப கிருஷ்ணன், அதிமுக சார்பில் போட்டியிடும் தனது தாயார் லீமா ரோஸ் மாட்டினை, எதிர்கட்சியினர் விவசாயத்தைப் பற்றி எங்கள் குடும்பத்திற்குஎன்ன தெரியும் என தவறாக விமர்சித்து வருவதாகவும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூர்வீக விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்றும் தொடர்ந்து விவசாயத்தை மேற்கொண்டு வருவதாகவும்,, விவசாயத்தைப் எங்களுக்குபற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
எம்ஜிஆர் ஆரம்பித்து", ஜெயலலிதா வளர்த்த கட்சியை விட்டுவிட்டு அதிமுகவிற்கு துரோகம் இழைத்துவிட்டு சீட்டுக்காக விஜய் கட்சியில் அரசியல் வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக இணைந்துள்ளார், லாட்டரி பற்றி தவறாக பேசும் கு.ப கிருஷ்ணன் ஆதவ் அர்ஜுனா இல்லாவிட்டால் த.வெ.க கட்சியே இல்லை என்றும் , கூட்டத்திற்கு கூட ஆதவ்விடம் கையேந்தி நிற்கும் நிலையில் த.வெ.க உள்ளது என்றும், அப்படி இருக்கும்போது லாட்டரி பற்றி பேச எந்த ஒரு தகுதியும் இல்லை என்றும்
தீய சக்தி திமுக என வார்த்தைக்கு வார்த்தை கூறிவிட்டு ஸ்டாலின் மற்றும் உதயநிதியை எதிர்த்து அவரது தொகுதிகளில் வாக்கு சேகரிக்கவில்லை என்றும், அவர்களது தொகுதியில் டம்மி வேட்பாளரை நிறுத்திவிட்டு ஒரு சமரசம் செய்துள்ளார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
சொந்த பணத்தை வைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம் இதுவரையிலும் 200 கோடி வரை செலவு செய்துள்ளோம், மருத்துவமனை கட்டுதல் ;மற்றும் பள்ளிக்கூடம் சீரமைப்பு, போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதாக இருக்கிறோம், பதவிக்காக மட்டுமல்ல சேவை செய்யவும் இந்த அரசியலில் வந்துள்ளோம் என்றார்.
லீமா ரோஸ் ,,சொத்து மதிப்பு ஐந்தாயிரம் கோடிக்கு மேல் கணக்கு காட்டியுள்ளனர், விதிகளுக்கு உட்பட்டு சம்பாதிப்பதை மக்கள் நம்புகிறார்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதி போன்று விதிமுறைகளை மீறி சம்பாதிக்கவில்லை, பினாமி பெயரில் சொத்துக் குவித்துள்ளனர், எனவே மக்கள் லால்குடி தொகுதியை மாற்றி விடுவார்கள் என எங்களை நம்புகிறார்கள்.
ஆதார்ஜுனா விஜய் கட்சிக்கு என எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என்பதனை கணக்கு பார்த்தாலே தெரியும், எங்கிருந்து பணம் வருகிறது என்பதனை பார்த்தாலே தெரியும்.
இரவு 10 மணியை கடந்தும் மக்கள் என் அம்மாலீமா ரோஸ் மாட்டினுக்கு ஆதரவு தருகிறார்கள், மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது அதனால்தான் அதிகமாக குற்றம் சாட்டு முன் வைக்கிறார்கள், மூன்று முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த சௌந்தர பாண்டியன் எதுவும் செய்யவில்லை அவரையும் எதுவும் செய்யவிடாமல் அமைச்சர் நேரு தடுத்து விட்டார் என குற்றம் சாட்டினார்.
கு.ப கிருஷ்ணன் மீது தேர்தல் விதிமுறையை மீறி பேசியதாக மானநஷ்ட வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளதாகவும், தவெகவுக்கு எதிரியாக தற்போது லால்குடியில் அதிமுக மட்டுமே உள்ளதால் இது போன்ற குற்றச்சாட்டை கு.ப கிருஷ்ணன் முன் வைக்கிறார் என்றும்,
புதுச்சேரியில் விஜய் கட்சியினர் ஒரு சீட் மட்டுமே வெற்றி பெறுவதாக எக்ஸிட் போல் நிலவரம் தெரிவித்துள்ளது, அது கூட வாய்ப்பில்லை, தமிழகத்தில் ஒரு ஐந்து சீட் மட்டும் தான் வருவார்கள் அதிலும் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும்.
8000 ரூபாய் கூப்பன் கொடுத்து ஒரு இளம் பெண் தற்கொலைக்கு திமுகவினர் காரணமாகிவிட்டனர், இந்த நிலை எங்கும் ஏற்படக்கூடாது, திமுகவினர் பணம் பட்டுவாடா செய்து பல இடங்களில் மாட்டிக்கொண்டனர், இது போன்ற தீய சக்திகள் வரக்கூடாது என்பதால் தான் நாங்கள் மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு வந்துள்ளோம். என்றும்
பாண்டிச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது 18 முதல் 21 சீட்டுகள் பெற வாய்ப்புள்ளது, கண்டிப்பாக இந்தமுறை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், பிரதமர் மோடி போன்ற பிரதமர் நமக்கு கிடைத்தது ஒரு பொற்காலம், அவரது ஆட்சியில் மாநிலத்துக்கான பணத்தை கேட்டு பெற்று சிங்கப்பூரை போன்று மாற்றுவோம் என்றும், அதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை என்றும், அதேபோன்று லால்குடியையும் மாற்ற முயற்சிப்போம், என்றும்,,, அரசியலுக்கு சேவை செய்ய வேண்டும் என வருவோர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும"
அரசின் ஐந்தாண்டுகளுக்கு கிடைக்கும் 15 கோடி பணத்தையும், மற்றும் தங்களது சொந்த பணம் 50 கோடியை செலவிட்டு லால்குடியை மிகுந்த வளர்ச்சி மிக்க தொகுதியாக மாற்றுவோம் என்றும்,
மண்ணச்சநல்லூரில் இளம்பெண் தற்கொலைக்கு காரணமான திமுக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மக்களை ஏமாற்றி போட்டு வாங்க முயற்சித்தால் எப்படி நாடு நன்றாக இருக்கும், ரெட்ஜன்ட் மூவிஸ்ஸில் இன்ப நிதியை வைத்து ரஜினி படத்தை எடுப்பதற்கு பணம் எவ்வாறு வந்தது, முதல்வருக்கு வண்டி கூட இல்லை என்கிறார்கள் இதை எல்லாம் எவ்வாறு சாத்தியம் என பலமாககேள்வியை லட்சிய சனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ். சார்லஸ் மார்ட்டின்எழுப்பினார்..


No comments:
Post a Comment